மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரில் தான் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏடன் நகரில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி முகாமிற்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 60க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் உதவியிடன் ஏமன் ராணுவம் அந்நாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுடன் கடந்த 17 மாதங்களாக போரில் ஈடுப்பட்டு வருகிறது.
ஐ.நா சபை வெளியிட்டுள்ள தகவலில் ’17 மாதங்கள் நிகழ்ந்த தாக்குதல்களில் இருத்தரப்பினர் மத்தியில் 6,600 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு செய்துள்ளதாகவும்’ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Blogger Comment