பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டியதாக கூறி ஜேர்மன் பெண் யாழில் கைது.

REPORTED BY: NETRIGUN NEWS
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மன் பிரஜாவுரிமை கொண்ட இந்தப் பெண் சுன்னாகம் பிரதே
சத்தில் வசித்து வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு மருதனார்மடம் பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் குறித்த சுவரொட்டியை ஒட்டியதாக பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்திலேயே நேற்று முன்தினம் இரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றும், தமிழ்த் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து அறிந்த சுன்னாகம் பொலிஸார் உடனடியாக அந்த சுவரொட்டிகளை அகற்றியிருந்த நிலையில் விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளிகளைக் கொண்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சுவரொட்டிகளை ஒட்டிய பெண்ணை அடையாளம் கண்டதாகவும், இதற்கமையவே நேற்றைய தினம் இரவு அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.
ஜேர்மன் பிரஜாவுரிமையைக் கொண்ட இந்தப் பெண்ணுக்கு ஸ்ரீலங்கா பிரஜாவுரிமையும் இருப்பதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பிரிவு, இன்றைய தினம் யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியது.
இதற்கமைய மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த பெண் விளக்கமறியலில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்தப் பெண்ணை விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தால் பிணை அனுமதி கிடைப்பது மிகவும் கடினமானது என்றும் தெரிவித்துள்ள தமிழ் சட்டத்தரணிகள், எதற்காக இந்தப் பெண் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment