இலங்கை மற்றும் சீனா இடையில் நாடாளுமன்ற தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் சீன அரசு விடுத்த விசேட அழைப்புக்கு அமைய சபாநாயகர் , நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கு
ம் கட்சிகளின் தலைவர்கள் நேற்று சீனா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு பதிலாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்த பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
சீன அரசாங்கம் இந்த பயணத்திற்கான அனுசரணையை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Blogger Comment