கார்த்தியின் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் காஷ்மோரா. இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்து முடிந்தது.
இதில் பேசிய கார்த்தி. இந்த படத்தினுள் நிறைய பேரின் உழைப்பு உள்ளது. இந்த படம் என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம். காஷ்மோரா படம் மிக ஜாலியான படம் அதே சமயம் அதிகம் சவால் நிறைந்த படமும் கூட, இந்த படத்தின் பட்ஜெட் பெரியது என்றாலும், ஒரு சில விஷுவல் எபெக்ட் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உதவியுடன் ட்ரல்லி வைத்து எடுத்துள்ளோம், ஏனென்றல் எங்களிடம் பெரிய அளவில் விஷுவல் எபெக்ட் செய்ய காசு இல்லை, பாஹுபலியை ஒப்பீடு செய்யும் போது நாங்கள் கொஞ்சம் ஏழை தான் என்று ஜாலியாக பேசினார்.
மேலும் இந்த படம் தீபாவளி விருந்தாக வருகிறது, குடும்பத்துடன் ஒரு பித்து விதமான பயணத்துக்கு சென்றது போல் இருக்கும் என்று தெரிவித்தார்

Blogger Comment