தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல் மீள்குடியேற்றம், காணாமல்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்காத நிலையில் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது என வடமாகாண அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான விஷேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா யாழப்பாணத்திற்கு விஜயம் செய்து வடமாகாண அமைச்சர்களை சந்தித்தபோது அவர்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
பத்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த 10 ஆம் திகதி கொழும்பு வந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான விஷேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் ஐ.நா அதிகாரி வடமாகாணத்தின் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா ஆகியோரை வடக்கு மாகாண சபையின் அலுலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Blogger Comment