யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் அண்மைய நாட்களில் இரவு வேளைகளில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு காணப்படுகின்ற நிலையிலும் , இரவு வேளைகளில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைய நாட்களாக ஆயுதம் தாங்கிய பொலிசார் உட்பட சுமார் பத்து பொலிசார் அடங்கிய பொலிஸ் குழுக்கள் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
முக்கிய சந்திகளில் நிற்கும் இந்த பொலிஸ் குழுக்கள் வீதியால் செல்லும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் , என்பவற்றை மறித்து வாகனங்களை பரிசோதனை செய்வதுடன் , ஆவணங்களையும் பரிசோதனை செய்கின்றனர். அத்துடன் , வாகன ஓட்டிகளிடமும் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறாக யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ள போதிலும் , இரவு வேளைகளில் , துப்பாக்கி சூட்டு சம்பவம் , வாள் வெட்டு சம்பவங்கள் , வீடு புகுந்து தாக்கும் சம்பவங்கள் , இடம்பெற்று வருகின்றன.
கடந்த 3ம திகதி திங்கட்கிழமை , யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றினுள் புகுந்த கும்பல் அங்கிருந்த மூவர் மீது வாளினால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
கடந்த 5ம் திகதி புதன்கிழமை அதிகாலை யாழ்.வைத்திய சாலை வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் முன் இருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை எரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது.
கடந்த 5ம் திகதி புதன்கிழமை அதிகாலை யாழ்.வைத்திய சாலை வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் முன் இருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை எரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது.
இந்நிலையில் நேற்று 6ம் திகதி வியாழக்கிழமை அதிகாலை யாழ்.பிரம்படி 2ம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அண்மைய நாட்களாக யாழில் இல்லாதிருந்த வாள் வெட்டு , குழு மோதல்கள் என்பன தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. அதேநேரம் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப் பட்டு உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் ஒருவித அச்ச நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை பல கொலைகள், கொள்ளைகள் மேற்கொண்ட சன்னாவையும் அவனது கூட்டாளிகளையும் பொலிசார் சுதந்திரமாக உலாவ விட்டுள்ளார்கள் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

Blogger Comment