யாழ்ப்பாணம் நெடுந்தீவு வைத்தியசாலையின் தரத்தை உயர்துமாறு கோரி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் பற்றாக்குறையினால் 18 வயதுடைய பாடசாலை மாணவி ர. டிலாஜினி திடீர் மரணமடைந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
4 ஆயிரத்து 500 குடும்பங்களைக்கொண்ட நெடுந்தீவில் ஒரு வைத்தியர் மாத்திரமே சேவையாற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் திடீர் சுகயீனமடையும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குரிய வசதிகள் நெடுந்தீவு வைத்தியசாலையில் இல்லையெனவும்இ அதனை தரமுயர்த்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நெடுந்தீவு பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.


Blogger Comment