இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன நேற்று முன்தினம் இந்தியாவின் கரையோர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான ‘சமுத்ரா பெஹெரிதார்” கப்பலை பார்வையிட்டார்.
இதன்போது இலங்கைக் கடற்படைத் தளபதியை இக் கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் டீ.ஆர்.சர்மா வரவேற்றதுடன் கடற்படை மரியாதையும் வழங்கப்பட்டது.
அதன்பின்னர் கப்பலில் சிறிய பயணத்தை மேற்கொண்டதுடன் இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
ரியர் அட்மிரல் தர்மேந்திர வத்தேவ, மேற்கு கடற்பிராந்தியத்துக்குப் பொறுப்பான கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா ஆகியோருடன் இலங்கை கடற்படை தலைமையகம் மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Blogger Comment