வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இன்று (11.10.2016) 6மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பிரதேச செயலகத்தின் மேல்மாடி பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த 50ற்கும் மேற்பட்ட செட்டிகுள பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அத்துடன் மேல்மாடி பகுதியில் இருந்த சில ஆவனங்கள் எரிந்துள்ளதாகவும் மின்னொழுக்கே இதற்கு காரணமாக இருக்குமெனவும் கூறப்படுகிறது மேலதிக விசாரணைகளை செட்டிகுள பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

Blogger Comment