உயர் பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறிச் செயற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் போதும், நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கு முன்னதாகவும் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.
எனினும் இந்த உத்தரவினை உயர் பொலிஸ் அதிகாரிகள் உதாசீனம் செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்கவிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, தமக்கு அறிவிக்காமல் முன்னாள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரும் இணைப்பு அதிகாரி ஒருவரும் அப்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனுக்கு அனுப்பி வைத்த கடிதம் ஒன்று தொடர்பில் திசர சமரசிங்கவிடம் விசாரணை நடத்தியிருந்தது.
படைச்சேனாதிபதி என்ற ரீதியில் முன்னாள் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட முன்னதாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
எனினும் சில உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த உத்தரவினை உதாசீனம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Blogger Comment