ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்துவதற்காகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் இறைபொருள் உறைந்துள்ளது.
வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.
ஆயுத பூஜை அன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுத பூஜையின் சிறப்பம்சமாகும்.
Blogger Comment