தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் சர்வதேச மகளிர் பிரிவின் ஜேர்மன் கிளையின் அனுசரணையில் திருமதி.செல்லாவின் ஒழுங்குபடுத்தலில் இன்று கிளிநொச்சி திருநகரில் இன்று தையல் பயிற்சி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பொன்.காந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இதில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் மயூரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரச்சார செயலர் கணேஸ்வேலாயுதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சர்வதேச விவகார பொறுப்பாளர் கீரன் ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி செல்வராணி திருநகரின் முக்கியஸ்தர்கள் வேலாயுதம் தெய்வேந்திரம் வல்லிபுரம் எழுத்தாளர் நடராசா சந்திரன் ஜெயந்திநகர் முக்கியஸ்தர் சந்திரசேகரம் மகிளிர் குழுக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க மகளிர் பிரதிநிதி கோகுலச்செல்வி செயற்பாட்டாளர் ரவி மற்றும் தையல் பயிற்சி நிலைய மாணவிகள் ஆசிரியைகள் நலன்விரும்பிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Blogger Comment