புதிய அரசியலமைப்புக்கு J.V.P ஆதரவளிக்காது

அவசர அவசரமாக கொண்டு வரப்படும் அரசியலமைப்புக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது என கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வார இறுதி ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு குறுக்கு வழிகள் கிடையாது.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முயற்சிக்கின்றார்.
எனினும், சர்வதேசத்தை திருப்தி படுத்தும் நோக்கில் அவசரமாக புதிய அரசியலமைப்பு உருவாக்க அரசாங்கத்திற்கு இடமளிக்கப்பட முடியாது.
தேசிய ஒற்றுமையை உருவாக்கக்கூடிய, மக்களின் உரிமைகளை உறுதி செய்யக்கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
காலம் கடந்த சரத்துக்கள் நீக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பிற்காக எமது கட்சி குரல் கொடுக்கும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment