யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பிள்ளையான்காடு இந்துமயானத்தில் நடைபெற்று வந்த அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோரியும், குறித்த மயானத்தைப் பயன்படுவதற்கு அனுமதிக்குமாறு கோரியும் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் உடுவில் பிரதேச செயலகம் மற்றும் வலி. தெற்குப் பிரதேச செயலகத்திற்குச் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இன்று காலை உடுவில் பிரதேச செயலகத்திற்குச் சென்ற பொதுமக்கள் உடுவில் பிரதேச செயலர் எஸ்.நந்தகோபாலனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன் போது மயானத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

Blogger Comment