விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மந்த கதியிலான தொழிற்சங்க நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளதனை தொடர்ந்து விமான பயண செயற்பாட்டு நடவடிக்கைகள் மீண்டும் பாதிப்படைந்துள்ளன.

நேற்று மாலை முதல் தரையிறக்கப்படும் மற்றும் வெளியேறுகின்ற விமான பயணங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
பல விமான பயணங்கள் தாமதமேற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க, மத்தல மற்றும் இரத்மலானை ஆகிய விமான நிலையங்களில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் கடந்த சில நாட்களாக காணப்படுகின்ற விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால், எவ்வித பாதிப்பும் இல்லையென போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான போக்குவரத்து கட்டுபாட்டாளர்களின் பிரச்சனை தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் கடந்த 4ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு கிடைத்த தீர்வு நிர்வாகத்தினால் செயற்படுத்தாமையின் காரணமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

Blogger Comment