பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்துக்கு (வற்வரி) எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இது தொடர்பான பிரதி நீதிமன்றத்தால் தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
பாராளுமன்றம் நேற்று 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஏற்கனவே அரசாங்கம் கொண்டுவந்த வற் வரி திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை இடைநிறுத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் புதியதொரு திருத்தத்தை அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது. இதற்கு எதிராக மஹிந்த ஆதரவு அணியினர் மீண்டும் வழக்கத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Blogger Comment