கல்வி என்பது தமிழர்களுக்கு இன்று தேவையாகவுள்ள மூலதனம்.ஏ.சுகுமாரன்

புறநகர் பகுதி மாணவர்களின் பெற்றோருக்கு கல்வி மூலதனம், நகர்ப்பகுதி பெற்றோருக்கு கல்வி கௌரவம் என மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை திறப்பு விழாவும் வாசிப்பு வளநிலைய திறப்பு விழாவும்  நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இப்பாடசாலையில் கற்றலுக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் வீட்டுக்கு செல்ல விரும்பாத கற்றல் சூழல் ஒரு மாணவனுக்கு அமையும்போதே அது வெற்றிப்பாதைக்கு செல்லும். கல்வி என்பது தமிழர்களுக்கு இன்று தேவையாகவுள்ள மூலதனம்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment