அரசுடன் சரணாகதி அரசியல் செய்யவில்லை: செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவும், பலர் தெரிவிப்பதைப் போன்று அரசாங்கத்துடன் சரணாகதி அரசியல் செய்யவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிராந்திய காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களது அபிலாஷைகளையும் தன்மானத்தையும் விலைபேசுகின்ற வகையில் தமிழீழ விடுதலை இயக்கமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ என்றைக்கும் செயற்படாதென குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன், சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டுமென்றும் அந்த சந்தர்ப்பங்களே தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பாக அமையுமென்றும் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment