மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மின்தூக்கி (லிப்ட்) பழுது! ஊழியர்கள் குற்றசாட்டு

கிழக்கு மாகாணத்திலே போதனா வைத்தியசாலை என்றால் அது மட்டக்களப்பு வைத்தியசாலை தான் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் பாருங்கள் இந்த நிலைமையை.
இந்த வைத்தியசாலையில் தான் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், தாதியர் பட்டக் கற்கைநெறி பயில்பவர்கள் என்று எல்லோரும் பயிற்சி எடுத்து  வருகின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மின்தூக்கி (லிப்ட்) பழுதடைந்து விட்டதனால் மேல்மாடிக்கு நோயாளர்களை கொண்டு செல்வதில் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 
குறித்த வைத்தியசாலையின் மின்தூக்கி 40 வருடங்கள் பழமை வாய்ந்தது எனவும் அது அடிக்கடி பழுதடைவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சில நாட்களாக மின்தூக்கி பழுதடைந்ததால் மேல்மாடியிலுள்ள நோயாளர்களை கீழ்த்தளத்திற்கும், சத்திர சிகிச்சை செய்யப்பட்ட நோயாளர்களை மேல்மாடிக்கும் கைத்தாங்கலாக கொண்டு செல்கின்றபோது படிகளில் கால் இடறி விழுந்து நோயாளர்கள் ஆபத்தான காயங்களை எதிர் நோக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.
கட்டடங்களை கட்டுகின்ற திருத்துகின்ற விடயத்தில் அதி கூடிய அக்கறை காட்டும் வைத்தியசாலையின் பணிப்பாளர் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் அவசியத்தேவையான மின்தூக்கி போன்ற விடயத்தில் அதே அக்கறையை காட்டுவதாக இல்லை எனவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment