அபிவிருத்தி அடைந்த நாட்டின் நிலையை அடைவதே இலங்கையின் இலக்கு ! ஜனாதிபதி

ஆசிய ஒத்துழைப்பு உரையாடல்’ தொடர்பான இரண்டாவது உச்சி மாநாட்டின் பெறுபேறுகள் ஆசிய ஒத்துழைப்பு பிராந்திய நாடுகளுக்கிடையே சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்த உதவும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டார்.

எதிர்வரும் வருடங்களில் ஆசியா ஒரு புதிய நிதிக் கேந்திர நிலையமாகவும் நிதிச் சேவை தொழிற்துறைக்கான மையமாகவும் மாறும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆசிய ஒத்துழைப்பு உரையாடலின் பங்கை ஒரு செயல்திறனுடைய மன்றமாக மேலும் கட்டியெழுப்பும் நோக்குடன் ‘ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் தொலைநோக்கு 2030’ மற்றும் ‘ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் பிராந்திய ஒத்துழைப்புக்கான வீதி வரைபையும் இந் நாடுகளின் தலைவர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (10) பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடலின் இரண்டாவது உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாவது: பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் இலங்கையின் நோக்கம் உயர்ந்த வருமானம் பெறும் அபிவிருத்தி அடைந்த நாட்டின் நிலையை அடைவதாகும். இதற்கென பல்வேறு கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் பிராந்தியத்தில் சுற்றுலா துறைக்கு ஒரு பாரிய வாய்ப்பு உள்ளது. இது எமது நாடுகளில் நிலையான சமூக, கலாசார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வகிக்கலாம். இலங்கையின் பொருளாதாரத்தை இயக்கும் ஒரு முக்கிய துறையாக சுற்றுலாத்துறை உள்ளது.
பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு விஞ்ஞான தொழில்நுட்பத்துறையின் அபிவிருத்தியை ஒரு முக்கிய அம்சமாக நாம் கருதுகிறோம்.
இந்த உச்சிமாநாட்டில் புரூனை நாட்டின் சுல்தான், குவைத் அமீர், பூட்டான் பிரதமர், கம்போடிய பிரதமர், ஈரான் ஜனாதிபதி, லாவோஸ் பிரதமர், மலேசியப் பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment