கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கின்ற புதிய விளையாட்டுத் தொகுதிக்கான அடிக்கல்நாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.விளையாட்டுத்துறை அமைச்சர், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவினால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.பின்னர் மாலை 05.00 மணிக்கு கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டி ஒன்று நடைபெற்றது.
கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்ட வடமாகாண உதைபந்தாட்ட அணியினர், தன்னை எதிர்கொண்ட கிழக்கு மாகாண அணியினரை (2--0) கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றனர்.
போட்டியின் முன்பாதியின் போது, (1--0) கோல்கள் அடிப்படையில் வட மாகாண அணியினர் முன்னணியில் இருந்த வேளை இடைவேளைக்கு சற்று முன்பதாக, கிழக்கு மாகாண அணியினரால் போடப்பட்ட கோலினை, போட்டியின் மத்தியஸ்தர் மறுதலித்ததினால், மைதானத்தில் சிறு சல சலப்பு ஏற்பட்டு, போட்டியை நடாத்திய விளையாட்டுத்துறை அதிகாரிகளின் பெருமுயற்சியின் பலனாக சமரசம் காணப்பட்டு, போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

Blogger Comment