டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து உள்ளிட்ட 8 விளையாட்டுகளுக்கான சங்கங்கள், வீரர்/வீராங்கனைகளுக்கு ரயில் கட்டண சலுகைக்கான சான்று அளிக்க ரயில்வே தடை விதித்துள்ளது.
போட்டிகளில் பங்கேற்கும் வீரர்/வீராங்கனைகள், போட்டி நடைபெறும் இடத்துக்கு செல்வதற்கான ரயில் பயணச் சீட்டுகளில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய கூடைப்பந்து சம்மேளனம், ஜூடோ சம்மேளனம், இந்திய டேக்வாண்டோ சம்மேளனம், அகில இந்திய டென்னிஸ் சங்கம், இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு, இந்திய வில்வித்தை சங்கம், இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் ஆகிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரயில்வே ரத்து செய்துள்ளது.
எனவே, அவை சான்றளிக்கும் வீரர்/வீராங்கனைக்களுக்கு ரயில் கட்டண சலுகை வழங்கப்பட மாட்டாது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் அல்லது செயலரால் சான்றளிக்கப்பட்டவர்களுக்கே கட்டண சலுகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Blogger Comment