மற்றுமொரு அமெரிக்க போர்க்கப்பல் நாளை ஸ்ரீலங்காவை வந்தடையவுள்ளது

யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் (US-40) என்ற கப்பல் நாளைய தினம் ஸ்ரீலங்கா நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
வழக்கமான பணியில் எரிபொருளை வழங்குவதற்காகவும் துறைமுகத்தைப் பார்வையிடுவதற்காகவுமே இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, கப்பல் மாலுமிகள் மற்றும் தங்கியிருக்கும் தொண்டர் பணியாளர்கள் அனைவரும் கரையோர விடுமுறை ஒன்றை கழிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் இந்து ஆசிய பசுபிக் சமுத்திர வலயத்தில் மீட்பு உதவி மற்றும் மீட்புப் பணிகளை வழங்குவதற்காகவும் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ வீரர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவும் குவாம் என்ற இடத்தில் நிலைகொண்டுள்ள ஒரு நீர்மூழ்கிக் கப்பலெனவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
500 சிப்பந்திகள் குழுவை உள்ளடக்கியிருப்பதுடன், ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் மேற்பரப்புத் தளத்திற்கும் பராமரிப்பையும், பாதுகாப்பையும் வழங்குவதற்கான செயற்பாட்டுத் திட்டத்தில் ஏழு மற்றும் ஐந்து அடியில் அமெரிக்க இராணுவ வீரர்களைப் பரவலாக நிலைநிறுத்தும் ஒரு திட்டத்தில் உள்ளது. 
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் வழக்கமான பணிகளுக்காக ஸ்ரீலங்காவிற்கு வருகைத்தரும் மூன்றாவது கப்பல் இதுவென்பதோடு, யுஎஸ்எஸ் புளு ரிச்ட் மற்றும் யுஎஸ்எஸ் நியூ ஓர்லன்ஸ் என்ற ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்கள் ஏற்கனவே வருகைத்தந்துள்ளன.  
ஸ்ரீலங்கா - அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது.
இதேவேளை இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரை 12 வெளிநாட்டு போர்க்கப்பல்கள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment