மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மணல் குறைபாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு மணல் குறைபாடுகள் நிலவுகின்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து மணலுக்கான வழங்குனர்களைப் பதிவு செய்தவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத் திட்டங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் அனேகமான திட்டங்கள் இவ்வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டியவையாகும்.
எனினும் இந்த மாவட்டத்தில் மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அவற்றை உரிய காலத்தினுள் பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அரச திணைக்களங்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றினை சீர் செய்ய தங்களது பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட வழங்குனர்களாகத் தொழிற்பட விருப்பமுள்ளவர்கள் இருப்பின் அவர்களுக்கு விசேட அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதன் ஊடாக அவர்களிடமிருந்து தேவையான மணலைப் பெற்று குறித்த திட்டங்களை உரிய காலத்தினுள் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே தங்களது பிரதேச எல்லைக்குள் உரிய அனுமதிப் பத்திரத்தினைக் கொண்டு மணலுக்கான உரிய தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடியவர்கள் இருப்பின் அவர்களை, தங்களுக்கு விஷேட அனுமதிப்பத்திரம் பெற்று கொள்வதற்காக வழங்குனர்களாக விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என கடிதத்தின் மூலம் பிரதேச சபைகளின் செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment