டெங்கு : 956 பேருக்கு அழைப்பாணை

டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை வைத்திருந்த 956 பேருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கவும் 56 பேருக்கு எதிராக வழக்கு தொடரவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாம் நாளில் 22, 928 இடங்கள் பரீட்சிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை 346 சுகாதார சேவை பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டது. முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு, சுகாதார சேவை அதிகாரிகள் உட்பட சுமார் 20 ஆயிரம் பேர் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவும் ஆபத்து உள்ள கொழும்பு கம்பஹா, கண்டி, இரத்தினபுரி, மட்டக்களப்பு, யாழ். மாவட்டங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று பாடசாலைகளிலும், வேலைத்தளங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றும் (29) இந்த நடவடிக்கை தொடர இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 41,200 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment