நல்லிணக்கத்துக்கு எதிரான சவால்களை முறியடிக்க இலங்கைக்கு அமெ.உதவும்

இலங்கையின் புதிய அரசாங்கமானது தற்போது பயணிக்கும் பாதை தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டுக்களைத் தெரிவித்த அமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இலங்கைக்கு வழங்க முடியுமான சகல சாத்தியமான உதவிகளை யும் தொடர்ந்தும் வழங்கவிருப்பதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐநா தலைமையகத்தில் (செப்.20) சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையின் தற்போதைய அரசானது முன்னெடுத்துவரும் வழிமுறைகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கமானது, வடக்கு மற்றும் தெற்கில் ஸ்திரத்தன்மையற்று செயற்படும் சில நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களிடமிருந்து பல சவால்களை எதிர்கொண்டுவருவதையும் ஜனாதிபதி தெரிவித்தார். உதாரணமாக வடக்கில், சிறியளவிலான மக்கள் குழுவினர், சில தீவிரவாதக் குழுக்களின் அழுத்தங்கள் காரணமாக அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கு மறுத்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல் தெற்கிலுள்ள சில தீவிரவாதக் குழுக்கள் நல்லிணக்க முயற்சிகளை குழப்புவதில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். ஆனாலும் கூட்டு அரசாங்கமானது அவ்வாறான எதிர்ப்புக்களை கவனத்தில் கொள்ளாது தேவையான திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
கூட்டு அரசாங்கதினரிடையே வேறுபட்ட கொள்கைகள் காணப்பட்டாலும், நல்லிணக்க செயற்பாட்டினை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் பரந்துபட்ட ரீதியிலான கொள்கையின் அடிப்படையில் பணிபுரிவதற்கு இணங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தினார். இதன் காரணாமாக அரசாங்கத்தின் ஸ்தரத்தக்மையினை மேலும் பலப்படுத்திக்கொண்டு, 2015 ஜனவரி 08 இல் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்ய மக்களினுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 15 மாதங்களில் இலங்கை அரசாங்கம் அடைந்துகொண்ட சாதனைகளுக்காக ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜோன் கெரி, அமெரிக்காவின் உதவிகள் தொடர்ந்தும் இலங்கை அரசுக்கு கிடைக்குமென்றும் உறுதியளித்தார்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment