சனசமூக நிலையங்களின் சம்மேளனத் தெரிவு

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத் தெரிவு  நடைபெற்றது.
பிரதேச சபையின் விரிபடுத்தப்பட்ட செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கும்வகையில் இந்த சம்மேளனத் தெரிவு நடைபெற்றது.
பிரதேச சபைகளின் வேலைத்திட்டங்களில் பல திட்டங்களை கிராமங்களில் நடைமுறைப்படுத்துவதில் சனசமூக நிலையங்களே அதிகப்பங்கு வகிக்கின்ற அதேவேளை, பிரதேச சபைகளுக்கான தேர்தல் அடுத்துவரும் சில மாதங்களில் நடைபெறுமென கருதப்படுகின்றது.
இந்நிலையில், நடைபெற்றுள்ள இச்சம்மேளனத் தெரிவு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
நேற்று பகல் 12 மணியளவில் நடைபெற்ற இத்தெரிவில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து சனசமூக நிலையங்களின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் தலைவராக புதுக்குடியிருப்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் சுப்பரமணி யேஸ்வரனும் செயலாளராக மாணிக்கபுரத்தைச் சேர்ந்த சந்திரமோகனும் பொருளாளராக சிவச்சந்திர மூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டனர்.
உப தலைவர், உப செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் தெரிவும் இடம்பெற்றது இத்ததெரிவுகள் அனைத்தும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் அமைந்திருந்தது
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment