
அனுஷ்கா, நயன்தாராவே சோலோ ஹீரோயினாக ஜெயித்து விட்டார்கள், ஏன் என்னால் முடியாதா? என காலில் சலங்கையை மாட்டி த்ரிஷா களத்தில் குதித்த படம் தான் இந்த நாயகி. ஏற்கனவே தெலுங்கில் படுதோல்வியடைந்த இந்த படம், தமிழில் தற்போது ரிலிஸ் ஆகியுள்ளது. சரி படத்தின் கதை தான் என்ன என்று பார்ப்போம்.
கதைக்களம்
ஒரு மர்மமான பங்களா, பேய் படம்னாலே அது தானே லீட், அந்த பங்களாவில் வெள்ளிக்கிழமை விரதம் போல், வெள்ளிக்கிழமையானால் த்ரிஷா புல் மேக்கப்புடன் யாரையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார், அவர் வரவில்லை என சோகமாக உள்ளே போகிறார்.
உள்ளே வந்ததும் கையில் கத்தியுடன் ஒரு மர்மம் நடக்க அதை தொடர்ந்து ஒருவர் இறக்கிறார், பிறகு எதற்காக அவரை த்ரிஷா கொலை செய்தார், இவர் ஏன் பேய் என்று இப்படி காமெடி செய்கிறார் என்பதை முடிந்தால் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
படத்தை பற்றிய அலசல்
ஏங்க த்ரிஷா சோலோ ஹீரோயினா இல்லை என்றாலும் ஜெஸ்ஸி, ஹேமானிகா என்று எல்லோரையும் கவர்ந்து தானே இருந்தீர்கள், பிறகு ஏன் இந்த விபரீத முடிவு, நீங்களும் கஷ்டப்பட்டு, எங்களையும் இப்படி கஷ்டப்படுத்தியுள்ளீர்கள்.
எதை வைத்து இந்த கதையை நீங்கள் சம்மதித்தீர்கள்?, எதற்காக நடித்தீர்கள்? என பல கேள்விகள் ரசிகர்களிடம் உண்டு, வேண்டாம் த்ரிஷா, இதெல்லாம் நமக்கு வேண்டாம், எங்களுக்கு நீங்க ஜெஸ்ஸியாக வந்தாலே போதும் தலையில் வைத்து கொண்டாடுவோம் என்பது தான் ரசிகர்களின் மனநிலை.
படத்தில் காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார்கள் சிரிப்பு வரவில்லை, பயமுடுத்துகிறேன் என்று ஏதோ செய்கிறார்கள் பயமும் வரவில்லை, அதிலும் ஜெயபிரகாஷின் அம்மன் பாடல் எல்லாம் அய்யோகோ மனநிலை தான்.
படத்தின் ஒரே ஒரு ஆறுதல் கோவை சரளா, மனோபாலா என நமக்கு தெரிந்த சில காமெடி முகங்கள் செய்யும் கலாட்டாக்கள் மட்டும் தான்.
இந்த படத்திற்கு க்ளாப்ஸ் என்பதை தவிர்த்து படத்தையே பல்ப்ஸ் என்று சொல்லிவிடலாம், அதற்காகவே அந்த காலம் தவிர்க்கப்படுகின்றது.
மொத்தத்தில் நாயகி- பீல்ட் அவுட்.
Cast:

Blogger Comment