மனித வளத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிடும்

சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரம் கற்க உலகில் எந்த நாட்டிலும் அனுமதி வழங்கப்பட்டது கிடையாது. இதனால் கிராமிய கல்வி மட்டம் பூச்சியத்திற்குத் தள்ளப்படும் என ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சித்தியடையாத மாணவர்களுக்கும் உயர்தரம் கற்க இடமாக்கப் போவதாகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளது குறித்து நேற்று (22) பாராளுமன்ற அறையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த போதே அவர் தேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர்-
எமது ஆட்சியில் கணிதப்பாடம் சித்தியடையாத மாணவர்களுக்கு வேறு துறைகளில் கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 2 வருடங்களில் குறித்த பாடத்தில் சித்தியடைய வேண்டும் என நிபந்தனை இடப்பட்டது.
சாதாரண தர பரீட்சையை சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரம் கற்க அனுமதிப்பதன் மூலம் கல்வி மட்டம் பூச்சியத்திற்கு வந்துவிடும். சிறந்த மனித வளத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டுவர நேரிடும் என்றார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment